வாகன விபத்து: 3 ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

இந்தியாவில் மதுரை திருமங்கலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உதவியாளரோடு சாலையைக் கடக்க முயன்ற மூன்றாம் வகுப்பு மாணவி கார் மோதியதில் உயிரிழந்தார்.

மதுரைச் சேர்ந்த சானியா எனும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி பள்ளிக்குச் சென்று விட்டு வேனில் வீடு திரும்பிய போது வேன் உதவியாளர் மாணவியை அழைத்துக் கொண்டு வேனின் முன்பக்கம் சென்று சாலையை கடக்க முயன்ற போது வேனின் பின்புறம் வந்த கார் எதிர்பாராத விதமாக இருவரும் மீதும் மோதி முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீதும் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டதில் குறித்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பள்ளி உதவியாளர் பலத்த காயம் அடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்