வாகன விபத்து: 25 மாணவர்கள் படுகாயம்

இந்தியாவில் தொப்பூர் வனப் பகுதியில் சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் அரச பேரூந்தும், லொறியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

பேரூந்து ஆஞ்சநேயர் கோயில் அருகே வந்தபோது பிரேக் பழுதானதால் எதிரே வந்த லொறி மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்