வாகன விபத்து: 2 பேர் காயம்

நீர்கொழும்பு – குருநாகல் வீதியின் தம்பதெனிய பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

பட்டா ரக லொறியொன்று நீர்கொழும்பு – குருநாகல் வீதியின் தம்பதெனிய பகுதியில் பயணித்து கொண்டிருந்த போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியொன்றுடன் பின்பக்கமாக மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் கிரியுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.