
வாகன விபத்து: மூவர் படுகாயம்
இந்தியாவில் சிவகங்கை மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
சடையங்காடு விலக்கில் வீதியில் நின்று கொண்டிருந்த கார் மீது அரசு பேரூந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் படுகாயமடைந்ததுடன் விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேரூந்து சாரதி மதுபோதையில் இருந்ததாகவும், அவரது இடுப்பில் மது போத்தல் வைத்திருந்ததாகவும் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பேரூந்து சாரதியை தனபாலை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
