
வாகன விபத்து : பொலிஸ் உத்தியோகஸ்தர் காயம்
கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் 68 வயதான அமைச்சு ஒன்றின் முன்னாள் செயலாளர் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது எதிர் திசையில் அமைச்சு ஒன்றின் முன்னாள் செயலாளர் செலுத்தி சென்ற ஜீப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
