வாகன விபத்து: பரிதாபமான நிலையில் இளைஞன்

பொரளை – கொடகம பனாகொட வீதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் பாரவூர்தியின் பின்புறம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்