
வாகன விபத்து: துவிச்சக்கர வண்டியில் சென்றவருக்கு நேர்ந்த கதி
தொடுவாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் – மகாவெவ பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த காருடன் அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டி மோதியதில் காயமடைந்த துவிச்சக்கர வண்டியின் சாரதி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மாரவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
