வாகன விபத்து : தாயும் மகளும் பலி

வவுனியா கண்ணாட்டி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் டிப்பர் வாகனம் ஒன்று மோதி தாயும் மகளும் உயிரிழந்துள்ளார்கள்.

விபத்தில் கன்னாட்டி பகுதியை சேர்ந்த சிவலோகநாதன் சுபோகினி (வயது – 36), டினுசிகா (வயது – 6) என்ற இருவரே உயிரிழந்தனர்.

கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காக காத்திருந்தனர். இதன்போது, வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த டிப்பர் வாகனம் வீதியை விட்டு அவர்கள் மீது மோதியது. விபத்தில் தாயும், மகளும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றொரு சிறுவன் டிப்பர் வாகனத்தை கண்டதும் ஓடிச்சென்று விபத்தை தவிர்த்துக்கொண்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

டிப்பர் ரக வாகனத்தில் மூவர் பயணித்திருந்தனர். விபத்தை அடுத்து அவர்களில் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் ஏனைய இருவரையும் ஊர்மக்கள் துரத்திப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதேவேளை, விபத்தையடுத்து பொதுமக்கள் டிப்பர் வாகனத்தை சேதப்படுத்தியதுடன் அதனை எரிப்பதற்கு முற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான விசாரணைகளை பறையநாலங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

வாகன விபத்து ; தாயும் மகளும் பலி!

வாகன விபத்து ; தாயும் மகளும் பலி!