
வாகன விபத்து: தந்தை உயிரிழப்பு
முல்லைத்தீவு பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
செல்வபுரம் பகுதியை சேர்ந்த கதிரவேலு லட்சுமனன் (வயது – 47) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாங்குளம் முறிகண்டி செல்வபுரம் பகுதியில் ஏ9 வீதியில் கிளிநொச்சியிலிருந்து வீடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே உயிரிழந்தும், படுகாயமடைந்துமுள்ளனர்.
பார ஊர்தியின் சாரதி தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
