வாகன விபத்து: சாதாரண தர பரீட்சை எழுதவிருந்த மாணவிக்கு நேர்ந்த கதி
குருநாகல் – மாவத்தகம, கெம்பிலிதியெத்த புராதன விகாரைக்கு முன்பாக இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது மாணவி உயிரிழந்துள்ளார்.
கஹபத்வல பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் வீதியில் சறுக்கி எதிர்திசையில் வந்த பேருந்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் தந்தையும், மகளும் படுகாயமடைந்த நிலையில், மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மகள் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்