வாகன விபத்து: கார் சாரதி உயிரிழப்பு, 8 பேர் காயம்
இந்தியாவில் மதுரை திருமங்கலம் அருகே நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் கார் சாரதி உயிரிழந்த நிலையில், அதிலிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் காயமடைந்தனர்.
புளியங்குடியை சேர்ந்த செல்வம் தனது மகனை சென்னை தனியார் கல்லூரியில் சேர்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றுவிட்டு திரும்பும்போது திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் டி.குன்னத்தூரில் எதிரே வந்த பேருந்து மீது கார் மோதியதாகக் கூறப்படுகிறது.
காரை வேகமாக வந்த பேருந்து சுமார் 50 அடி தூரம் இழுந்துச்சென்றதில், சாலையோரப் பள்ளத்தில் சரிந்து விழுந்து நொறுங்கியதில் கார் சாரதி இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். மேலும் சாலைப்பணிகள் காரணமாக நான்கு வழிச்சாலையில், ஒருபுறம் மட்டுமே அனைத்துப் போக்குவரத்தும் திருப்பி விடப்பட்டிருந்த நிலையில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்