
வாகன விபத்து: கான்ஸ்டபிள் உயிரிழப்பு
சியம்பலாண்டுவ – மொனராகலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
சூரியவெவ பொலிஸ்துறையில் பணியாற்றும் 29 வயதுடைய கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காரில் 4 பேர் கொண்ட குழு திருமண நிகழ்வுக்காக பயணித்துக்கொண்டிருந்த போது பாரவூர்தி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
