வாகன விபத்து: காதலன் கண் முன்னே காதலி பலி

இந்தியாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நாதனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசுதா என்ற பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் தனது காதலன் கௌதமுடன் திருப்பத்தூரில் உள்ள தோழி வீட்டுக்குச் சென்றுவிட்டு சிவம்பட்டி ஏரி கரையில் வளைவில் திரும்பும் போது மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி விபத்து இடம்பெற்றது.

சம்பவ இடத்திலே குறித்த பெண் உயிரிழந்ததுடன் காதலனுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்