
வாகன விபத்து: ஒரே குடும்பத்தின் மூவர் பலி!
கொழும்பு குருணாகல் பிரதான வீதியின் துல்ஹிரிய பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை முச்சக்கரவண்டியொன்றும், டிப்பரொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (வயது – 40), தாய் (வயது – 39) மற்றும் மகன் (வயது – 13) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
