வாகன விபத்து: ஒருவர் பலி

இந்தியாவில் காரைக்குடி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு தேவகோட்டை நோக்கி சென்ற காரும், திருவாடனை கைகாட்டியிலிருந்து சென்னை நோக்கி சென்ற காரும் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 4 மணியளவில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் விபத்தில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்