வாகன விபத்து: ஒருவர் பலி
ஹொரணை, கெபெல்லகொட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர் .
ஹொரணை கெபெல்லகொட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த மாத்தளை மனன்வத்தை தல்வத்த பகுதியை சேர்ந்த அசங்க புஷ்பகுமார செனவிரத்ன (வயது – 41) என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.