வாகன விபத்து: ஒருவர் பலி

பேலியகொடை புளுகஹ சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேற்று புதன்கிழமை மாலை மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன், மனைவி இருவரும் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், மோட்டார் சைக்கிளை செலுத்திய கணவன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் அவரின் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்