வாகன விபத்து: ஒருவர் படுகாயம்

வவுனியா ஏ9 வீதி வலயக்கல்வி பணிமணைக்கு முன்பாக இன்று ஞாயிற்று கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து, மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில்,

மோட்டார் சைக்கிளின் சாரதி காயமடைந்த நிலையில் பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.