வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு

இந்தியாவில் சென்னை பென்சன்ட் நகரில் நேற்று திங்ட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வரதராஜ் சாலை நடபாதை அருகே இரு பெண்கள் ஓட்டி வந்த கார், சாலையோரம் படுத்துறங்கியவர் மீது மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து கேள்வி எழுப்பிய பொது மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து காருடன் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்