வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு

இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆவடி அருகே மணல் ஏற்றச்சென்ற இரண்டு லொறிகள் போட்டிப் போட்டுக்கொண்டு வளைவில் முந்தியபோது முன்னே சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து இடம்பெற்றது விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

மேலும் தகவல் அறிந்து திரண்ட அப்பகுதியினர் லொறிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சாலை மறியலில் ஈடுபட்டதுடன் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்