வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு
யாழ். கோப்பாய் பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
கோப்பாயை சேர்ந்த எமில் ரவி (வயது – 44) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
யாழ்பாணம் கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து கோப்பாய் இராச பாதை வீதியில் பயணித்த வேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.