வாகன விபத்து: ஐவர் காயம்

 

நுவரெலியா நானுஓயா, கிலாரண்டன் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்னர்.

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணித்த 5 பேரும் காயமடைந்த நிலையில், நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.