
வாகன விபத்து: இளைஞர் உடல் நசுங்கி உயிரிழப்பு
இந்தியாவில் தாம்பரகம் அருகே நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெருங்குளத்தூர் பகுதியில் நண்பர்களுடன் வசித்து வரும் ஐயப்பன் ( வயது 27 ) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றபோது, குறித்த இளைஞனை முந்தி செல்ல முயன்ற லொறி மோதியதில் சக்கரத்தின் அடியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் நீண்ட நேரமாகியும் நண்பனை காணவில்லை, தொலைபேசி அழைப்பையும் ஏற்கவில்லை என சந்தேகமடைந்த நண்பர்கள் தேடி வந்தபோது, இறந்து கிடந்த இளைஞனைப் பார்த்து கதறி அழுத காட்சிகள் காண்போரை கலங்கச் செய்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
