
வாகன விபத்து: இளம் தம்பதியினர் பலி
கொழும்பு கடுவெல பிரதேசத்தில் நேற்று முன் தினம் வெள்ளிகிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர்.
விபத்தின் போது 27 வயதுடைய கணவனும் 25 வயதுடைய மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 34 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி படுகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலைக்கு குறித்த தம்பதியினரை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி மீது பின்னால் வந்த லொறி மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
