வாகன விபத்து: இருவர் காயம்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை பன்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 6.00 மணியளவில் கெப் ரக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

திருகோணமலை – அனுராதபுரம் ஏ12 வீதியினூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் பன்குளம் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த இருவரும் வேலையின் நிமிர்த்தம் அம்பாறை – காரைதீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கையில் சாரதியின் தூக்கம் காரணமாக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.