வாகன விபத்து: இரண்டு பேர் பலி

இந்தியாவில் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் 2 வயது குழந்தை உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.

திருமங்கலம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற கார், எதிரே வந்த அரசுப் பேருந்து மீது அதிவேகமாக மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்