வாகன விபத்தில் வயோதிபப் பெண் உயிரிழப்பு

ஹட்டன் – கொழும்பு வீதியின் கேகாலை, எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுள்ளவல விகாரை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டி – பவ்வாகம பகுதியைச் சேர்ந்த 84 வயதானவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கரவனெல்ல நோக்கி பயணித்த தனியார் பேருந்து, முன்னால் பயணித்த வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட போது எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் எட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.