வாகன விபத்தில் முதியவர் பலி
வாகன விபத்தில் முதியவர் பலி
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் உள்ள புத்தளம், வென்னப்புவ – கொலிஞ்சடிய பகுதியில் நேற்று சனிக்கிழமை ஹயஸ் வான் – மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கட்டுனேரியா பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய நபரே இதன் போது உயிர் இழந்துள்ளார்.
சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வான் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற முதியவர் பலத்த காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்று வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.