வாகன விபத்தில் படுகாயமடைந்த மாணவி உயிரிழப்பு

பிபில மொனராகலை வீதியில் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இரு மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துலாஷி கெஷாலா (வயது – 15) என்ற மாணவி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாணவிகளும் பயிற்சி வகுப்பிற்குச் சென்று மாலை ஐந்து மணியளவில் பிபில மொனராகலை வீதியின் முன்பாக நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கார் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இரு மாணவர்களின் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இரு மாணவிகளும் பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கவலைக்கிடமான நிலையில் இருந்த ஒரு சிறுமி உயிர் இழந்துள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்