சுவிட்சர்லாந்தில் : வாகன உள்ளக தரிப்பிடத்திலிருந்து 3 சடலங்கள் மீட்பு

சுவிட்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் உள்ள வீட்டின் உள்ளக வாகன தரிப்பிடம் ஒன்றினூள் இருந்து மூன்று சடலங்களை கடந்த வியாழக்கிழமை நண்பகல் 1.30 மணியளவில் பொலிசார் மீட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட உறவினர்களின் புகாரின்படி, மூன்று பேரை இறந்த நிலையில் பொலிசார் கண்டுபிடித்தனர். இவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என தெரியவருகின்றது.

மூன்று பெரியவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதாக இதுவரை கிடைத்த தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. ஆர்காவ் மாநில பொலிசார் சம்பவ இடத்தில் வைத்து தடயங்களைப் பாதுகாத்துள்ளனர். அரசு வழக்கறிஞர் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

தற்கொலைக்கான காரணங்கள் தற்போது ஆராயப்பட்டு வருவதாக மாநில பொலிசார் தெரிவித்துள்ளனர்.