
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் இன்று தீர்மானம்
வாகன இறக்குமதிக் கட்டுப்பாடுகளை முடிவிற்கு கொண்டு வருவது தொடர்பான திட்டம் இன்று சனிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை ஒன்றிற்கமைய இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் பொதுப் போக்குவரத்து மற்றும் விசேட நோக்கங்களுக்கான வாகனங்களின் இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஆண்டின் 4ஆம் காலாண்டிற்குள் சரக்குப் போக்குவரத்திற்கான வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதேநேரம் 2025ஆம் ஆண்டில் சகல வாகனங்களுக்குமான இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதிய அறிக்கை கூறுகின்றது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக் காரணமாக நாட்டின் கையிருப்பைப் பேணுவதற்காக வாகனங்கள் மற்றும் ஏனைய பொருட்களின் இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கடந்த வருடம் முதல் கட்டம் கட்டமாக வாகனங்கள் தவிர்ந்த ஏனையவற்றிற்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகளை இலங்கை மத்திய வங்கி தளர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
