வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு: 7 பேர் காயம்
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர் தொடர்பில் அந்நாட்டுக் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
