
வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கையாக, கொழும்பு நகர எல்லைக்குள் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணங்களை தற்காலிகமாக இடைநிறுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.
மாநகர சபை முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண விலக்கு இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி முதல், டிசம்பர் 05ஆம் திகதி நள்ளிரவு வரை அமுலில் இருக்கும் என்று கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
நகர எல்லைக்குள் இடம்பெயர்ந்து, மாநகர சபையின் உதவியை நாடியுள்ள மக்களுக்கு உதவி கரம் நீட்டும் ஒரு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை தெரிவித்துள்ளது.
