வவுனியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாரிய எரிபொருள் – ஒருவர் கைது

-வவுனியா நிருபர்-

வவுனியா ஏ9 வீதியில் தாண்டிக்குளம் பகுதிக்கு அண்மையில் உள்ள இடம் ஒன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி எரிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற விசடே தகவலையடுத்து பொலிஸாரின் உதவியுடன் அந்தப்பகுதியில் உள்ள இடம் ஒன்று இன்று புதன்கிழமை இரவு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 900 லீற்றர் சுப்பர் டீசல், டீசல் 600 லீற்றர், பெட்ரோல் 400 லீற்றர் என்பன கைப்பற்றப்பட்டதுடன் இவற்றை பதுக்கிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்

கைப்பற்றப்பட்ட எரிபொருட்கள் ஏனைய சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.