வவுனியாவில் பாரிய விபத்து இருவர் பலி 9 பேர் படுகாயம் (இரண்டாவது இணைப்பு)

கண்டி – முல்லைத்தீவு பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற குறித்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சிறுவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் முல்லைத்தீவு விசுவமது பகுதியைச் சேர்ந்த சுயன் (வயது -30) மற்றும் யாழினி (வயது-33) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

விசுவமடு பகுதியைச் சேர்ந்தவர்கள் “பட்ட” ரக மகேந்திர வாகனத்தில் கண்டியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் எதிர்த்திசையில் வந்த டிப்பர் வாகனத்தோடு மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த “பட்ட” ரக மகேந்திர வாகனத்தில் 12 பேர் பயணம் செய்துள்ளதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகினறனர்.