
வவுனியா துப்பாக்கி சூட்டில் குடும்பஸ்தர் பலி
வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா வடக்கு பட்டிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அழகையா மகேஸ்வரன் (வயது-58) என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது இவர் மீது இடியன் துப்பாக்கியை பயன்படுத்தி சூடு நடத்தப்பட்டுள்ளதாக, நெடுங்கேணி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் , இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
