வவுனியாவில் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

வவுனியா – தம்பனைச்சோலை பகுதியில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 80,000 மில்லிகிராம் ஐஸ்போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.