வவுனியாவில் இளைஞன் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

வவுனியாவில் இளைஞன் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

வவுனியா பூம்புகார் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இளைஞன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கபட்டுள்ளான்.

வவுனியா கல்மடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் பகுதியை சேர்ந்த 22 வயதடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீடகப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனை காணவில்லை என உறவினர்கள் தேடி நிலையில் வீட்டின் முன் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிழைலயில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

பொலிஸார் மற்றும் கிராம சேவையாளருக்கு அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற  பொலிஸார்  இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News