
வவுனியாவில் இளம் யுவதி சடலமாக மீட்பு
வவுனியா- சமனங்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆசிக்குளம் – சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்த கவிப்பிரியா (வயது – 23) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குறித்த யுவதி தூக்கிட்ட நிலையில் காணப்படுவதாக, சிதம்பரபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் பொல மேற்கொண்டு வருகின்றனர்.
