வவுனதீவில் நெல்களஞ்சியசாலையை சேதப்படுத்திய காட்டு யானை

மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி கிராமத்தில் புகுந்த காட்டு யானைகள் தனியாருக்கு சொந்தமான நெற்களஞ்சியசாலை ஒன்றை உடைத்து சேதப்படுத்தி உள்ளது.

வவுனதீவு கரவெட்டி கிராமத்தில் உள்ள அம்பலவானர் நெற்களஞ்சியசாலையையே காட்டு யானை உடைத்து சேதப்படுத்தி உள்ளது

பெரும் சத்தத்துடன் வளவுக்குள் புகுந்த காட்டு யானைகள் கட்டப்பட்டிருந்த களஞ்சியசாலையை கடுமையாக தாக்கி சேதப்படுத்தி உள்ளதுடன் அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள பல நெல்முறைகளையும் இழுத்துச் சென்றுள்ளது.

மேலும், அங்கிருந்த பயன் தரும் சில தென்னை மரங்களுக்கும் சேதம் விளைவித்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த யானை வளவுக்குள் நுழைந்து உடைக்க ஆரம்பித்தபோது பெரும் சத்தத்துடன் களஞ்சிய சாலையை உடைத்துக் கொண்டு இருந்ததாகவும், பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

கிராமத்தில் இருந்த அயலவர்கள் கூக்குரலிட்டு பெரும் சிரமத்திற்கு மத்தியில் காட்டு யானைகளை துரத்தியதாகவும், அப் பிரதேசவாசிகள் மேலும் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்