வழமைக்கு திரும்பியது வெருகல் பிரதேச செயலகம்!

-மூதூர் நிருபர்-

வெருகல் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் முன்னெடுத்த இரண்டுநாள் சுகயீன விடுமுறை போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனையடுத்து வெருகல் பிரதேச செயலகத்தின் நாளாந்த செயற்பாடுகள் இன்று புதன்கிழமை வழமைபோன்று இடம்பெற்றது.

பிரதேச செயலக வளாகத்தில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதையும் காணமுடிந்தது.

கடந்த சனிக்கிழமை வெருகல் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு பொதுமக்கள் முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் தமக்கு பாதுகாப்பு இல்லையென தெரிவித்து நேற்றும்,நேற்று முன்தினமும் வெருகல் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் சுகயீனன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை வெருகல் பிரதேச செயலாளர் மீண்டும் கடமைக்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.