வழக்குகளை விரைவுபடுத்த IMF கோரிக்கை

ஊழல் எதிர்ப்பு நிறுவனத்தை வலுப்படுத்தவும், வழக்குகளை விரைவுபடுத்தவும் சர்வதேச நாணய நிதியம் இலங்கையிடம் கோரியுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிணை எடுப்பு மறு ஆய்வுக்குப் பின்னர் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளால் ஏற்படும் அதிகரித்த கீழ்நோக்கிய அபாயங்களுக்கு மத்தியில் இலங்கை தமது வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கான ஆட்சேர்ப்பு துரிதப்படுத்தப்பட வேண்டும், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின்படி அதன் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நாணய நிதியம் கோரியுள்ளது.