
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும்.
அத்துடன் வடமேற்கு மாகாணத்தில் காலை வேளையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு, சபரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
