
வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள தகவல்
கொலன்னாவை மற்றும் முத்துராஜவளை எரிபொருள் முனையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை தொடர்பான தகவல்களை, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார்.
அதன்படி,
18,825 மெட்ரிக் டன் டீசல்
42 மெட்ரிக் டன் சுப்பர் டீசல்
ஒக்டேன் 92 ரக பெற்றோல் 33,498 மெட்ரிக் டன்
ஒக்டேன் 95 ரக பெற்றோல் 13,067 மெட்ரிக் டன்
386 மெட்ரிக் டன் ஜெட் ஏ1 ரக எரிபொருள், ஆகியவை கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டை வந்தடைந்துள்ள கப்பல் ஒன்றிலிருந்து டீசலை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
