
வலயமட்ட தமிழ் மொழித்தினப் போட்டி
வலயமட்ட தமிழ் மொழித்தினப் போட்டி 2025 ஆம் ஆண்டிற்கான நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
அம்பாறை – தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று காலை 8.30 மணியளவில் திருக்கோயில் வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் வலயக் கல்வி பணிப்பாளர் இரா.உதயகுமார் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக திருக்கோயில் வலயக் கல்வி பணிப்பாளர் இரா.உதயகுமார் சிறப்பு அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் கலந்து கொண்டார்.
ஆரம்ப நிகழ்வாக தமிழ் மொழித்தின பண்பாட்டு ஊர்வலத்தில் கலை கலாசார நிகழ்வும் இடம்பெற்றது அதை தொடர்ந்து 2024 ம் ஆண்டில் தேசிய ரீதியில் வெற்றி பெற்ற மூன்று மாணவர்களையும் பாராட்டி பதக்கம் அணிவித்தலும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.
அதை தொடர்ந்து வலய மட்ட போட்டிகள் ஆரம்பம் ஆகியதும் குறிப்பிடத்தக்கது.