வறட்சியான வானிலை குறித்து எச்சரிக்கை

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களில் வறட்சியான காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன், நாளை செவ்வாய்க்கிழமை காலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் உறைபனி ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகவே பொது மக்கள் தேவையான அளவு நீர் பருகுமாறும், நீராகரங்களை அதிகளவில் சேர்த்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.