வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர் மட்டக்களப்பு விஜயம்

வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர் ஆர்.எம்.ஜெயவர்த்தன இன்று செவ்வாய்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தனர்.

மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதியமைச்சர் களுதாவளையில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டு, அங்குள்ள குறைநிறைகளை வர்த்தகர்களிடமும், அப்பகுதி விவசாயிகளிடமும் கேட்டறிந்து கொண்டார்.

கிராமிய பொருளாதார அமைச்சினால் 300 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் குறித்த பொருதளாதார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டு 2017 ஆண்டு இறுதிப்பகுதியில் முடிவுறுத்தப்பட்டு இற்றைவரையில் அது மக்கள் பாவனைக்கு விடப்படாமல் இருந்து வந்தது.

புதிய அரசாங்கத்தின் செயற்பாட்டின் கீழ் குறித்த விசேட பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைக்கட்டிருந்தது.

கிழக்கு மாகாணத்திற்கென அமையப்பெற்றுள்ள இக்குறித்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விஸ்த்தரித்து அப்பகுதி விவசாயிகளுக்கும், வர்த்தகர்களுக்கு வசதி வாய்ப்பினைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்காக பிரதியமைச்சர் அங்கு விஜயம் மேற்கொண்டு நிலமைகளை நேரில் அதானித்திருந்தார்.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் உள்ளிட்ட பல அதிகாரிளும் கலந்து கொண்டிருந்தனர்.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24