
வர்த்தக பண்ட ஏற்றுமதி அதிகரிப்பு
இலங்கையின் வர்த்தகப் பண்ட ஏற்றுமதி, கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதம் 989.7 அமெரிக்க டொலர் வரையில் அதிகரித்துள்ளது.
இது 16.6 சதவீத அதிகரிப்பாகும் என இலங்கை ஏற்றுமதி ஊக்குவிப்புச் சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும் கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது, 5.59 சதவீத வீழ்ச்சியாகும் என்றும் அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் நாட்டின் ஏற்றுமதி சேவையில் மதிப்பிடப்பட்ட பெறுமதி, 904.5 மில்லியன் டொலராகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
