
வர்த்தக நிலையத்தில் பொருட்கள் கொள்ளை
மஸ்கெலியா நல்லத்தண்ணியில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்று முன் தினம் புதன்கிழமை இரவு மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
புதன்கிழமை இரவு மழை பெய்துகொண்டிருந்த போது இவ்வாறு கொள்ளை இடம்பெற்றுள்ளதுடன் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இருந்து தடயவியல் அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை சம்பவ இடத்துக்கு சென்று கை ரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
