வர்த்தக நிலையத்திற்கு அருகிலிருந்து சடலம் ஒன்று மீட்பு

வவுனியா நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

அப் பகுதியில் யாசகத்தில் ஈடுபடுபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வர்த்தக நிலையம் முன்பாக இன்று அதிகாலை எவ்வித அசைவுமின்றி ஈக்கள் மொய்த நிலையில் ஒருவர் உறங்கிய நிலையில் காணப்படுவதாக நபர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் அவரின் சுவாசத்தினை பரிசோதித்து அவர் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.

சடலம் தடயவியல் பொலிஸாரின் பரிசோதனைக்காக அவ்விடத்திலேயே காணப்படுவதுடன் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்